செவ்வாய், 29 ஜூலை, 2014

மஹா மூலிகை நத்தைச் சூரி

மகா மூலிகையான நத்தைச் சூரியைப் பற்றி இப்போது பார்ப்போம். இதை குழி மீட்டான் மூலிகை என்றழைக்கப்படுகிறது.அதாவது பிணமாகிக் குழியில் விழுந்தவனையும் மீட்டெடுக்கும் என்பதால் இந்தப் பெயர். நத்தைச் சூரி எண்ணெய் வர்ம பாதிப்புகளில் இருந்து உடலைவிட்டு உயிர் பிரியாமல் மீட்பதாலும் இதற்கு இந்தப் பெயர்.
நத்தைச் சூரி விதையை புறாவும் , காடையும் , கவுதாரியும் , குருவியும் இதை சாப்பிடுவதால் அவற்றுக்கு போக சக்தி மிக அதிகமாக இருக்கிறது.உடலை மிக அதிகமாக இறுக்கும்.உடல் இரும்பு போல ஆகும்.ஒரு மண்டலம் இச்சா பத்தியத்துடன் இருக்க அதிக பலமுண்டாகும்.விந்தை ஸ்தம்பனம் செய்ய உதவும். இந்திரிய ஸ்கலிதம் ( விந்து நஷ்டம் ) இல்லாமல் , *******************யும் திருப்தி செய்யலாம். ஏனெனில் விந்து ஞானத்துக்கு மிக முக்கியம்.
நத்தைச் சூரி வேரை வாயில் போட்டு மென்று கொண்டு சாறை நன்றாக மென்று விழுங்கிய பின் கண்ணில் மண்ணைப் போட்டால் கண் உறுத்தாது.கண் அறுகாது . நத்தைச் சூரியினால் கண் பலம் பெற்று விடுவதனால் இந்தளவு இதன் சக்தி வெளிப்படுகிறது .
நத்தைச் சூரி வேரை வாயில் போட்டு மென்று கொண்டு கண்ணில் மண்ணைப் போட்டால் உறுத்தாமல் கண்ணீர் கொட்டாமல் எப்போதும் போல பார்த்துக் கொண்டிருக்கலாம்.கண்ணிற்கு அவ்வளவு வல்லமை அளிக்கும். நோக்கு வர்மம் மற்றவரின் மேல் பிரயோகம் செய்ய கண்ணிற்கு பலம் அளிக்கும் மஹா மூலிகை.இது மட்டுமல்லாமல் மந்திரப் பிரயோகங்களிலும், இதை காலற்ற , உடலற்ற , தலையற்ற நாட்களைத் தவிர்த்து மற்ற முழு நாளில் தூப தீப எலுமிச்சம் பழம் பலி கொடுத்து சாப நிவர்த்தி செய்து எடுத்து இதன் வேரை தாயத்தில் அடைத்து இடுப்பில் அணிய சகல லோக வசியம் , ஞான வசியம் , லட்சுமி வசியம் , சரஸ்வதி வசியம் , பார்வதி தேவி வசியம் சித்திக்கும் என்று மூலிகை ஜால ரத்தினம் கூறுகிறது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நமது கிராமங்களில் நத்தைச் சூரி கருப்பட்டி தேத் தண்ணீர்தான் குடிக்கப்பட்டு,விருந்தாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.தேத்தண்ணீர் என்றால் தற்போது தேயிலைத் தண்ணீர் என்ற அர்த்தத்தில் வழங்கப்பட்டு வருகிறது . ஆனால் தேத்தண்ணீர் என்றால் உடலைத் தேற்றும் தண்ணீர் என்ற அர்த்தத்தில் வழங்கப்பட்டு வந்துள்ளது இப்போது அனர்த்தமாய் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஒரு தேயிலை விளம்பரத்தில் தேயிலை உடலுக்கு கெட்டது என்றது யார் சொன்னது ??? என்று கேள்வி வேறு . அதில் தேயிலையுடன் கலப்பதாக கூறும் சித்த மருந்துப் பொருட்களை தனியே உபயோகித்தால் கிடைக்கும் பலன்கள் தேயிலையுடன் கலந்து உபயோகிக்க கொடுக்கும் போது அதன் நற்பலன்கள் அனைத்தும் கெட்டுவிடும் .
தேயிலை என்று இப்போது கொடுக்கப்படும் டஸ்ட் டீ முழுக்க தேயிலைத் தூசியில் நிறம் , மணம் , திடம் போன்றவற்றுக்கு பல பொருட்கள் சேர்க்கப்பட்டு குப்பையாக தரப்படுகிறது . இந்தத் தொல்லை குக் கிராமங்களையும் பாழாக்கி வருவதுதான் வேதனையிலும் வேதனை .
முன்பு கிராமங்களில் இருந்து வந்த காலையில் நீராகாரம் பருகும் பழக்கம் பித்தத்தை தணிக்கும் . ஆனால் இப்போது குடிக்கும் டீயினால் பித்தம் அதிகரித்து பல வியாதிக்கு ஆட்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள் . இந்த நிலைக்கு காரணம் தங்களது பழக்க வழக்க மாற்றமே காரணமே !!! , என்பதும் புரியாத நிலைமையில் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவி நீர் பித்தம் போக்கும்
சோற்று நீர் இரண்டும் போக்கும்.
என்பதை மறந்து போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இது நோயணுகா விதிகளில் உள்ள முக்கிய விடயம்.
நத்தைச் சூரி விதை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.கருப்பாக எள் நிறத்தில் கோதுமையில் உள்ளது போல ஒரு கோடும் இருக்கும். இதனைப் பொன் வருவலாக வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு வெந்நீர் கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி உபயோகிக்க உடல் ரீதியாக பல பிரச்சினைகளை வர வொட்டாமல் தவிர்க்கலாம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக