புதினா ஒரு மருத்துவ மூலிகை
புதினா Mentha spicata ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி,
வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப்
போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே,
பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர். புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத்
தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும்,
பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை
பயன்படுத்தப்படுகிறது. புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி
வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து
பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப்
பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான
இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது. ஊளைச்
சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப்
புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும்,
ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம்,
வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை
சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும்
புதினாக் கீரை குணப்படுத்துகிறது. புதினாக் கீரையை வீட்டுத்
தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். புதினாக் கீரை
வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில்
ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச்
சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை
கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.
புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும்.
புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப்
பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம்
வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும்
துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும். இந்தப்
பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல்
சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார். எவ்வளவு பற்பொடி
தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும்
கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க
வேண்டும். சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை
இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில்
போட்டு நன்றாக இடிக்க வேண்டும். தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும்
சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள
வேண்டும். இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல
பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.
இந்த நோய் வர காரணங்கள் :
1)
பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிருந்தாலும் ,
2)
உடலுறவின் போது சிறுநீர் ,
மலம் அடக்குவதாலும் ,
3)
ஒரே இடத்தில் நாற்காலில் அமர்ந்து தொழில் புரிவோர்க்கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது .
4)
உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதா லும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும் ,
5)
அடிக்கடி நீர் அருந்தாமையினாலும் குடல் இளக்கமின்றி இந்நோய் தோன் றும் .
6)
அதிக உடலுறவு ,
அதிக காரமான உணவு உண்போருக்கும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமயங்களில் குழந்தை வெளி வரும் போது முக்குவதாலும் மூல நோய் தோன்றும் .
மருத்துவத்தில் இதனை மூன்று வகையாகக் கூறு கின்றனர் .
வெளிப்படையாக நமக்கு புலப்படுவதும் இவைகள் தான் .
1-
உள் மூலம் -
ஆசன வாயின் உட்பகுதியில் குருத்து போல் வளர்வது .
2-
வெளி மூலம் -
ஆசனவாயின் தசைப்பகுதிகள் பிதுங்கி வெளி வருவது .
3-
இரத்த மூலம் -
மலம் வெளிவரும் போது இரத்தம் கசிவது .
மூல நோயின் அறிகுறிகள் :
மலச்சிக்கல் ,
அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல் ,
உடல் சோர்வு ,
களைப்பு ,
ஆசன வாய் எரிச்சல் ,
ஆசனக்கடுப்பு ,
மலத்தோடு இரத்தம் கழிதல் ,
மார்பு துடிப்பு ,
முக வாட்டம் ,
போன்றவை ஏற்படும் .
மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும் ,
மயக்கம் உண்டாகும் .
மூல நோய் வராமல் தடுக்க :
1)
உணவில் கீரை வகைகள் ,
காய் பழ வகைகள் ,
தினமும்
சேர்த்துக் கொள்ள வேண்டும் .
2)
அடிக்கடி நீர் அருந்தவேண்டும் ,
தினமும் காலை மாலை மலம் கழித்தல் வேண்டும் ,
மலச்சிக்கல் உள்ள போது உடலுறவு கூடாது ,
தின மும் நடைப் பயிற்சி அல்லது எளிய உடற் பயிற்சி மேற்கொள்ளுதல் நல்லது .
3)
உணவில் விளக்கெண்ணை ,
நெய் ,
வெங்காயம் ,
தவறாது சேர்த்தல் வேண்டும் .
கருணைக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்தல் நன்று .
மூல நோய்க்கு எளிய மூலிகை மருந்துகள் :
1-
பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி ,
பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு வர மூலம் கரைந்து
விடும் .
2-
மூல நோய்க்கு துத்தி இலை சிறந்த மருந்தாகும் .
இரண்டு கை அளவு துத்தி
இலை ,
நறுக்கிப் போட்டு ,
சிறிது மஞ்சள் தூள் ,
சிறிய வெங்காயம் பத்து ,
அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள் ,
உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும் .
3-
வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கை பிடி அளவு
எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணை விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர சில நாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும் .(
தினமும் கட்டவும் )
4-
நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனி செடியைத் தேவையான அளவு எடுத்து வந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்கு காய விடவும் .
காய்ந்த பின் இலை ,
வேர் ,
தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும் .
இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு சேர்த்துப் பிசைந்து காலை ,
மாலை என நாற்ப்பது நாள்
சாப்பிட்டு வர அனைத்து மூல
வியாதியும் குணமாகும் .
இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது அதிக காரம் ,
பச்சை மிளகாய் ,
கோழிக்கறி சேர்க்கக் கூடாது .
மிளகு சேர்த்துக் கொள்ளலாம் .
உடல் உறவு கூடாது ....
இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சில சூப்பரான வழிகள் !
நன்கு தூங்கவும் :
நல்ல தூக்கத்குதுடன் ,
தூங்கும்போது குப்புறப்படுத்து தூங்குங்கள் .
இதனாலும் தொப்பைகுறையும் .
அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால் ,
குப்புறப்படுங்கள் .
தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சி :
யோகமுத்ரா
பத்மாசன நிலையில் அதாவது உட்கார்ந்து கொண்டு கால்களின் பாதங்கள் வெளிப்பகுதியில் இருக்குமாறு வைத்துக்கொண்டு
உடலை நேராக நிமிர்த்தி கைகளை மிக இளக்கமாக வைத்து
முதுகின் பின் புறத்திற்கு கொண்டு வந்து ஙீ வடிவில் வைத்து
உடலை முன்னோக்கி வளைத்து
கைகள் இரண்டால் கால் கட்டை விரல்களைப் பிடித்து முகத்தை தரையில் பதிக்க வேண்டும் .
ஆரம்பத்தில் இது கடினமாகத் தோன்றினாலும் ,
நாளடைவில் எளிதாக செய்துவிட முடியும் .
குனியும்போது மூச்சை வெளிவிட்டு ,
நிமிரும் போது மூச்சை உள்வாங்க வேண்டும் .
இவ்வாறு மூன்றிலிருந்து ஐந்து முறை செய்தல் வேண்டும் .
பயன்கள் .
கீழ்முதுகுத் தண்டுவலி நீங்கும் .
உடலின் இரத்த ஓட்டம் சீராகும் .
தொப்பை குறையும் .
வாயுத்தொல்லை நீங்கும் .
செரிமான சக்தி அதிகரிக்கும் .
கல்லீரல் பலப்படும் .
நரம்புகள் புத்துணர்வு பெறும் .
கால் மூட்டுகளில் வலி இருப்பின் ,
அவை குறையும் .
நன்கு மூச்சு விடவும் :
தினமும் தியான நிலையில் 30
நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தாலும் ,
தொப்பை குறைய ஆரம்பிக்கும் .
நடக்கவும் :
எதற்கெடுத்தாலும் ,
வண்டியில் செல்வதை தவிர்த்துவிட்டு ,
நடந்து சென்றால் ,
தொப்பை குறைவதோடு ,
கால்களும் வலுவாகும் .
சைக்கிள் ஓட்டவும் :
சைக்கிளில் செல்வதால் ,
சுற்றுச்சூழலை மாசுபடாமல் வைத்திருப்பதோடு ,
தொப்பையும் கரையும் .
அதிலும் தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டி வந்து ,
இரண்டு வாரம் கழித்து பாருங்கள் .
உங்கள் உடலில் நல்ல மாற்றம் தெரியும் .
நன்கு வாய்விட்டு சிரிக்கவும் :
தொப்பை குறைவதற்கு ,
நன்கு வாய்விட்டு சப்தமாக அடிக்கடி சிரிக்க வேண்டும் .
இது வயிற்று தசைகளுக்கான ஒரு உடற்பயிற்சியாகும் .
மேலும் வாய்விட்டு சிரித்தால் ,
நோயின்றி வாழலாம் .
தண்ணீர் அதிகம் குடிக்கவும் :
தொப்பை குறைய வேண்மென்றால் ,
தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் .
தண்ணீர் அதிகம் குடித்தால் ,
நிச்சயம் 2
வாரங்களில் தொப்பை குறையும் .
எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால் ,
அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும் .
இதனால் உடலில் கொழுப்புக்களின் சேர்க்கை குறைவதோடு ,
உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களும் வெளியேறிவிடும் .
மெதுவாக சாப்பிடவும் :
எப்போதும் மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுவதால் ,
அதிகமான அளவில் சாப்பிடாமல் இருக்கலாம் .
மேலும் இதனை எப்போதும் பின்பற்றினால் ,
தொப்பை வராமல் இருக்கும் .
காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் :
இது பச்சை காய்கறிகளின் சீசன் என்பதால் ,
உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள் .
அதிலும் ப்ராக்கோலி ,
பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் ,
உடல் எடை விரைவில் குறைவதோடு ,
தொப்பையும் குறையும் .
நீர்ச்சத்துள்ள பழங்கள் :
நீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை பசி ஏற்படும் போது சாப்பிட்டால் ,
உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு ,
தொப்பையும் குறையும் .
நார்ச்சத்துள்ள உணவுகளை நண்பர்களாக்கவும் :
நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்து வந்தால் ,
தொப்பை கரையும் .
அதிலும் ஓட்ஸ் ,
ரொட்டி ,
ப்ரௌன் பிரட் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் .
பொட்டாசிய உணவுகளை அதிகம் சாப்பிடவும் :
இரண்டே வாரங்களில் தொப்பை குறைவதற்கு ,
பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் .
அதுமட்டுமின்றி ,
பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தான் ,
தொப்பை போட ஆரம்பிக்குமாம் .
கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கவும் :
உடல் எடையை இரண்டே வாரங்களில் குறைக்க வேண்டுமானால் ,
கொழுப்புள்ள உணவுகளை அறவே தொடக்கூடாது .
குறிப்பாக ஜங்க் உணவுகளான சிப்ஸ் ,
பர்க்கர் ,
பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை மறக்க வேண்டும் .
உப்பை தவிர்க்கவும் :
தொப்பை குறைய வேண்டுமானால் ,
உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும் .
ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு ,
தொப்பையை குறைக்க தடையாக இருக்கும் .
எனவே உணவில் உப்பை அளவை குறைக்கவும் .
தொப்பையையும் உணவாலேயே குறைக்கலாம் .
கறுப்பு பீன்ஸ்
பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும் .
இவற்றை சாப்பிட்டால் ,
பசியே ஏற்படாது .
அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன .
இந்த உணவை அதிகம் சாப்பிட்டால் ,
வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன .
ஆகவே மறக்காமல் இந்த கறுப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் .
பேரிக்காய்
பேரிக்காயில் குறைவான அளவில் கலோரி இருப்பதோடு ,
நார்ச்சத்து அதிகமாக உள்ளது .
ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு ,
பின்னர் உணவை சாப்பிட்டால் ,
உடல் எடை நிச்சயம் குறையும் .
ஏனெனில் ஆய்வு ஒன்றில் ,
இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி ,
கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளேவோனாய்டு என்னும் இரண்டு ஆன்டி -
ஆக்ஸிடன்ட்கள் உள்ளன .
இவை உணவில் இருக்கும் கொழுப்புகள் வயிற்றில் தங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .
உருளைக்கிழங்கு
அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றான உருளைக்கிழங்கை சாப்பிட்டால் ,
உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர் .
ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால் ,
உடல் எடை குறைவதோடு ,
கொழுப்புகள் சேராமல் இருக்கும் .
வேர்க்கடலை
நட்ஸ் வகைகளில் வேர்க்கடலை மிகவும் சுவையுடன் இருக்கும் .
அத்தகைய வேர்க்கடலையில் சுவை மட்டும் இருப்பதோடு ,
அதனை சாப்பிட்டால் ,
உடல் எடையும் குறையும் .
ஏனெனில் இதில் என்னதான் கொழுப்புகள் இருந்தாலும் ,
அவை மிகவும் ஆரோக்கியமானவை .
மேலும் அவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும் .
ஆகவே இதனை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம் .
பாப்கார்ன்
ஸ்நாக்ஸிலேயே தானியங்களால் ஆன பாப்கார்ன் மிகவும்
சிறந்தது .
ஏனெனில் ஆய்வு ஒன்றில் தானியங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் ,
அந்த தானியங்களை சுத்திகரித்து சாப்பிடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தனர் .
அதில் தானியங்களை சுத்திகரித்து சாப்பிடுபவர்களை விட ,
அதை அப்படியே சாப்பிடுபவர்களின் எடை குறைவாக உள்ளது என்று தெரியவந்துள்ளன .
எனவே ஸ்நாக்ஸ்களில் பாப்கார்ன்னை சாப்பிட்டு வந்தால் ,
உடல் எடை அதிகரிக்காமலும் ,
தொப்பையும் வராமல் தடுக்கலாம் .
சூரியகாந்தி விதைகள்
கடைகளில் விற்கப்படும் சூப் ,
சாலட் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றின் மீது சூரியகாந்தி விதைகள் அழகுக்காகவும் ,
சுவைகாகவும் சேர்க்கப்படுகிறது .
அத்தகைய சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பான மோனோ -
அன் -
சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது .
ஆகவே இவற்றை தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் ,
வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்துவிடும் .
வெள்ளை டீ
(White Tea)
நாம் இதுவரை கிரீன் டீ மட்டும் தான்
உடல் எடையை குறைக்கும் என்று நினைத்துள்ளோம் .
ஆனால் கிரீன் டீயை விட வெள்ளை டீ உடலுக்கு ஆரோக்கியத்தை
தரும் .
ஏனெனில் அவற்றில் ஆன்டி -
ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது .
கிரீன் டீயில் 20
கிராம் காஃப்பைன் இருந்தால் ,
இதில் 15
கிராம் தான் இருக்கிறது .
மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து ,
இதய நோய் ஏற்படாமல் தடுப்பதோடு ,
உடல் எடையை குறைப்பதிலும் கிரீன் டீயை விட இது மிகவும் சிறந்தது .
வாழ்க வையகம் !
வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !