செவ்வாய், 29 செப்டம்பர், 2015

முத்திரை



1.முத்திரைகளை நடந்து கொண்டு செய்யக்கூடாது.
2.
முத்திரைகளை அமர்ந்த நிலையிலும் படுத்திருக்கும் நிலையிலும்
செய்யலாம்.
3.
உணவுக்கு முன்பும் பின்பும் 30 நிமிட இடைவெளி அவசியம்.
4.
குளிப்பதற்கு முன்பும், பின்பும் 30 நிமிட இடைவெளி அவசியம்.
5.
உங்களது மனம் எதற்காக முத்திரை செய்கிறோம் என்பதில்
கவனமாக இருக்க வேண்டும்.
6.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் முத்திரை செய்யலாம்.
7.
குறிப்பிட்ட கால அளவு மட்டுமே முத்திரைகளை செய்ய
வேண்டும்.
8.
முத்திரைகள் அனைத்தையும் இரண்டு கைகளிலும் செய்ய
வேண்டும்.





கீழேபடத்தில் உள்ள முத்திரையை இரண்டு கைகளிலும் சுண்டுவிரல் நகம் மீது ஆள்காட்டிவிரலை வைத்து அதன்மீது மோதிரவிரலும்,அதன்மீது நடுவிரலும் வைக்கவேண்டும். கட்டைவிரலை நீட்டி வைக்கவும்.
இந்த முத்திரையை தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் 20 நிமிடங்கள் செய்யவும். சுக்காசனம் அல்லது பத்மாசனம் அமர்ந்து செய்யவும். முடியாதவர்கள் நாற்காலியில் அல்லது தரையில் ஒரு காட்டன் விரிப்பு விரித்து அதன் மேல் அமர்ந்து செய்யலாம். நோய்வாய் பட்டவர்கள் தங்களால் முடிந்த நிலையில் செய்யலாம்.
பலன்கள்:
1. உடல் எரிச்சல் தீரும்.
2. நடையில் உள்ள தள்ளாட்டம் தீர்ந்து வேக நடை நடக்கலாம்.
3. கால்களுக்கு அதிகமான சக்தி கிடைக்கும்.
4. உடலில் பலம் ஏற்படும்.
5. அஜீரணம் தீரும்.


 



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



கீழே படத்தில் உள்ள முத்திரையை பத்மாசனம், அல்லது சுக்காசனம் அமர்ந்து 20 நிமிடங்கள் செய்யுங்கள். இது யோக முத்திரை ஆகும்.
படத்தில் உள்ளபடி நடு விரல் ஆள்காட்டி விரலை மடித்து, அதன் மேல் கட்டை விரலை கொண்டு அழுத்தவும். சுண்டு விரல், மோதிரவிரல் இரண்டையும் நீட்டிக்கொள்ளவும்.
பலன்கள்:
நாளமில்லாச்சுரைப்பிகள் நன்றாக வேலை செய்யும்.
2.
தலிவலி தீரும்.
3.
இருதய பலவீனம் தீரும்.
4.
உற்சாகம் பிறக்கும்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!




வியர்வை நாற்றம் போக்கும் முத்திரை:

படத்தில் காட்டியுள்ள முத்திரையை சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் இரண்டையும் மடக்கி உள்ளங்கையில் அழுத்தவும். பின்பு கட்டைவிரலை மோதிரவிரலின் ஓரத்தில் வைத்துக்கொண்டு நடுவிரலையும் ஆட்காட்டிவிரலையும் கட்டைவிரலின் மேலே வைக்கவும்.

பலன்கள்:

ஒரு சிலருக்கு உடலில் வியர்வை நாற்றம் ரொம்ப அதிகமாக இருக்கும். அவர்கள் இந்த முத்திரையை செய்தால் குணமாகும்
தினமும் காலை மாலை என 20 நிமிடங்கள் செய்யவும்






&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&




பிடறி வலி:
1. முதல் படத்தில் காட்டியுள்ள முத்திரையை இரண்டு கைகளின் கட்டை விரலை உள்ளங்கையில் படாமல் மடித்து வைக்கவும். அந்த கட்டை விரல் மேல்புறத்தில் மற்ற நான்கு விரல்களின் முனையையும் வைக்கவேண்டும்.
2. இரண்டாம் படத்தில் காட்டியுள்ள முத்திரையை இரண்டு கைகளின் மோதிர விரலை மடக்கி உள்ளங்கையில் அழுத்தவும். கட்டை விரல் முனையை ஆள்காட்டிவிரல் மற்றும் நடுவிரல் முனையில் சேர்க்கவும். சுண்டு விரலை நேராக நீட்டவும்.
இந்த முத்திரைகளை தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் 20 நிமிடங்கள் செய்யவும.
பலன்கள்:
இந்த முத்திரை தினமும் செய்தால் தலையின் பின்புறமான பிடறி வலி குணமாகும். பிடறியில் நீர் கோர்த்து இருந்தால் அதுவும் குணமாகும்.
 


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




கண் நோய்கள் மற்றும் சைனஸ்:
--------------------------------------------------
கீழே இரண்டு படத்தில் உள்ள புள்ளிகளிலிலும் தினமும் ஒவ்வொரு புள்ளியிலும் தினமும் காலை மாலை என இரண்டு வேளை 40 முறை அழுத்தம் குடுக்கவும்.
கண்களின் எந்த பிரச்சினைகள் இருந்தாலும் இந்த புள்ளிகளில் அழுத்தம் தரவும். கண்களின் ஓரத்தில் உள்ள புள்ளிகளில் மிக ஜாக்கிரதியாக அழுத்தம் தரவும். நகம் படாமல் அழுத்தவும்.
பலன்கள்:
---------------
பார்வைக்கோளாறுகள், கிட்டபார்வை தூரபார்வை அனைத்தும் குணமாகும்.
கண்களில் புறை சரியாகும் தொடர்ந்து செய்யவும்.
பின்பு சைனஸ், மூக்கடைப்பு, கண் எரிச்ச
ல், கண் அழுத்தம் (eye pressure) கண்களில் நீர் வழிதல், கண் சிவப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொடர் தும்மல் அனைத்தும் சரியாகும்.
நம்பிக்கையா பன்னுங்க நலம் பெருவீங்க நண்பர்களே.
அனைத்து புள்ளிகளிலும் அழுத்தம் தந்த பின் கையின் உள்ளங்கையில் ஒரு புள்ளி இருக்க்றதே அந்த புள்ளியில் கடைசியாக அழுத்தம் தரவும்.








AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA

பல் ஈறு பிரச்சினைகள்:
1. முதல் படத்தில் காட்டியுள்ள முத்திரையை இரண்டு கைகளின் விரல்களையும் சேர்த்து வைத்துக்கொண்டு கட்டை விரலின் முனையால் சுண்டு விரலின் கீழ் ரேகையில் அழுத்தம் தரவும்.
2. இரண்டாம் படத்தில் காட்டியுள்ள முத்திரையை இரண்டு கைகளின் மோதிரவிரல், மற்றும் நடுவிரல் ஆகியவற்றை சிறிது முன்புறம் சாய்த்து அவற்றின் மேல் ரேரையில் கட்டை விரலால் அழுத்தவும். சுண்டுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை நீட்டி வைக்கவும்.
இந்த முத்திரைகளை தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் 20 நிமிடங்கள் செய்யவும்.
பலன்கள்:
1. பல் ஈறு பிரச்சினைகள் அனைத்தும் தீரும். பல் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.
2. ஈறுகளில் ரத்தம் வருதல் தீரும்.



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக