மூலிகைகளின் அரசி "துளசி'
மூலிகைகளின் அரசி என அழைக்கப்படும் "துளசி' மிகத் தொன்மையான மற்றும் புனிதமான மூலிகையாகும். உடல், மனது மற்றும் ஆன்மாவுக்கு குணமளிக்கும் அருமருந்தாக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் பூஜிக்கப்பட்டு வருகிறது.
எண்ணற்ற ஆரோக்கிய பலன்களையும் வழங்கும் குணம் கொண்ட துளசி, தனது மாறுபட்ட குணமாக்கும் தன்மை காரணமாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆயுர்வேத சிகிச்சை முறையின் பயன்பாட்டில் உள்ளது. உடலின் மாறுபட்ட பல்வேறு செய்முறைகளை சமநிலைப்படுத்தும் அழுத்த எதிர்ப்பியாகவும் கருதப்படுகிறது.
துளசியின் அற்புதமான வாசனையும், துவர்ப்புச் சுவையும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது. ஆயுர்வேதத்தில் "வாழ்க்கையின் அமுதமாக' கருதப்படும் துளசி, மனிதனுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்து நீண்ட நாள் உயிர் வாழ வழி செய்வதாகவும் நம்பப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு வகையான பிணிகளைத் தீர்க்க துளசிச் சாறு பயன்படுத்தப்படுகிறது. மூலிகை தேநீர், உலரவைக்கப்பட்ட பொடி, பசுமையான இலை, நெய்யுடன் கலந்து தரப்படுவது என பல்வேறு வடிவங்களில் துளசியை உட்கொள்ளலாம்.
கற்பூர துளசியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய், மருத்துவம் மற்றும் மூலிகை அழகு சாதன பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, சரும நலனுக்கான தயாரிப்பு பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது. துளசியின் தெய்வீக அனுபவத்தோடு தொடங்கும் ஒவ்வொரு நாளின் காலைப்பொழுதும் தூய்மையின் முழுமையான அபிஷேகமாகத் திகழ்கிறது.
தாவரவியல் பெயர்: ஓசிமம் சாங்டம்,
அறிவியல் பெயர் ஓசிமம் டெனுய்ஃபுளோரம்.
துளசியின் முக்கிய பயன்கள்:
* பாக்டீரியாவுக்கு எதிராக செயல்பட்டு சரும தடிப்பு, சரும அரிப்பு, சொறி, முகப்பரு மற்றும் பிற சரும நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
* விஷத்தன்மையற்றது, வேதிப்பொருள் ரீதியாக மாற்றம் பெறாத தயாரிப்பு பொருளாகும்.
* சருமத்தை ஈரப்பதத்தோடு வைக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக