மூலம்..
ஜீரண மண்டலத்தின் கடைசி பகுதியான ஆசனவாயில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமானது மூலம். ஆசனவாய் (குதம்) உடலின் மேல்புற அடுக்காலும்,
மலக்குடலின் பகுதிகளாலும் உருவாக்கப்பட்டது. மலக்குடலின் சுவர்கள் கோழை – ஜவ்வு படலத்தால் மூடப்பட்டவை. வலியை உணரும் சக்தி குறைவு.
ஆனால் ஆசனவாயின் நரம்புகளுக்கும் அதை சுற்றியுள்ள தோலுக்கும் வலி உணர்வு அதிகம். வட்டமான தசை வளையம் (ஆசனவாய் ஸ்பிஸ்டர்) ஆசனவாயை மூடி வைக்கிறது.
இந்த வளையம் தானாகவே செயல்பட்டாலும், கீழ்ப்குதியை நம்மால் இறுக்கவோ, தளர்க்கவோ முடியும்.
மூலம் என்பது, மலக்குடல், குதம் இவற்றின் சுவர்களில் உள்ள ரத்த நாளமுடிச்சுகள் வீக்கம் அடைந்து விரிவது. நாளடைவில் ரத்தபோக்கு ஏற்படலாம். உள்ளுக்குள் இருக்கும் வரை,
அதாவது மலக்குடல், ஆசனவாய் இவற்றின் எல்லை கோட்டின் (மலக்குடல் – ஆசனவாய் சந்திப்பு) மேல் இருக்கும் மூலம் உள்மூலம் எனப்படும். இந்த எல்லை சந்திப்பின் கீழே வரும் மூலம்,
வெளிமூலம் எனப்படும். இவை குதத்துக்குள்ளும் இருக்கும். வெளியே துருத்திக் கொண்டும் இருக்கும்.
ஆசனவாயின் சுவர்கள் ‘ஸ்பான்ஜ்’ போன்றவை. இரத்த அழுத்தம் அதிகமானால் இந்த சுவரில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிந்து, முறுக்கி கொண்டு முடிச்சு போல் வீங்கி விடுகின்றன.
இது தான் மூலவியாதி.
காரணங்கள்..
1. முதல் முக்கிய காரணம் – மலச்சிக்கல் தான். அதுவும் நாள்பட்ட மலச்சிக்கல். இதனால் மலம் கெட்டியாகி, கல் போல் ஆகிவிடும். இந்த இறுகிய மலம் வெளியேறும் போது,
மென்மையான ஸ்பாஞ்ச் போன்ற ஆசனவாய் சுவர்களும் ரத்தக்குழாய்களும் பாதிக்ப்படுகின்றன.
2. ஆசனவாய்ப் பகுதியில் உள்ள ரத்தக்குழாய், திசுக்கள், பலவீனமாக, பிறவியிலிருந்தே இருக்கலாம். இதனால் மூலம் ஏற்படும்.
3. உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை, உட்கார்ந்தே செய்யும் வேலை. வருடக் கணக்காக நாற்காலியில் மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது.
4. குடலில் அல்சர் அல்லது புற்றுநோய் தோன்றினால் மூலம் உண்டாகும்.
5.அதிக உடற்சூடு,அசைவம் சாப்பிடுவதால்.
அறிகுறிகள்..
• முதல் கட்ட மூலநோயில் அவ்வளவாக அறிகுறிகள் தெரியாது. வலி இருக்காது. மலம் கழிக்கும் போது, சில சமயங்களில் சங்கடமாக இருக்கும். சிறிது ரத்தக்கசிவு இருக்கலாம்.
• இரண்டாவது கட்டத்தில் சதை வீங்கி வெளியே வரும்
• மலம் கழித்தபின் எரிச்சல்,வலி ஏற்படும்.
• மூன்றாவது கட்டத்தில் சதைகள் நன்றாக வீங்கி, வெளியே தள்ளப்படும். ஆசனவாயின் வெளியேலேயே வீங்கிய சதைகள் நிரந்தரமாக இருக்கும் ரத்த ஒழுக்கும், வலியும் ஏற்படும்.
அரிப்பும், ரணமும் உண்டாகும்.
மூல நோய்களின் பாதிப்புகள்..
மூல நோயால் ஆசனவாயில் வெடிப்புகள் ஏற்படும். இதை தவிர ஆசனவாயில் கட்டிகள் உண்டாகலாம். நாள்பட்ட மூலவியாதியால் ஆசனப் பாதையில் வேறு மார்க்கங்கள் உண்டாகும்.
இது பவுத்திரம் எனப்படும்.
எளிய சிகிச்சை முறைகள்..
1. முலிகை மலமிளக்கிகளால் மலத்தை சுலபமாக கழிக்க வைக்கலாம்.
2. எரிச்சல், வலி நிவாரணத்திற்கு, ஒரு தொட்டியில் வெந்நீரை நிறைத்து அதில் உட்கார்ந்திருக்கலாம். இதை சிட் பாத் என்பார்கள். தண்ணீரில் 10 டீஸ்பூன் திரிபால சூரணத்தை கலந்தால் மேலும் நல்லது.
3.முதல் கட்ட நோயாளிகளுக்கு மலச்சிக்கலை சரிசெய்தாலே போதும். அதிக நார்ச்சத்து (கீரைகள்) உள்ள உணவை எடுத்துக் கொண்டால் சரியாகி விடும்.
4.பூண்டு “பல்லை” ஆசனவாயில் சொருகி வைக்கலாம்.
5.கனிந்த வில்வம், பழம் – 10 கிராம், சர்க்கரை – 3 கிராம், கருமிளகுப்பொடி – 7 மிளகுகளை பொடித்து செய்தது, ஏலக்காய் – 3, இவற்றை தண்ணீரில் கலந்து குடிக்கவும்.
6.எள்ளை கரைத்து ஆசனவாயில் பற்று போடலாம். உள்ளுக்கு 1/2 தேக்கரண்டி எள்ளை வெண்ணையுடன் உட்கொள்ளலாம்.
7.உப்பு சேர்ந்த முள்ளங்கி சாறு 60 – 100 மி.லி. தினமும் 40 நாட்களுக்கு சாப்பிடவும்.
8.மூலத்திற்கு சிறந்த பானம் -மோர் தினமும், பல மாதங்களுக்கு இந்துப்பு, கருமிளகுப்பொடி கலந்த மோரை குடித்து வர வேண்டும். மோருடன் கடுக்காய், வெல்லம் இவற்றை சேர்த்து குடிக்கலாம்.
9.கடுக்காய் கஷாயத்துடன் வெல்லம் சேர்த்து, இரவில் படுக்கும் முன் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
10.ரோஜா மலரின் இதழ்களை (11 இதழ்கள்) 50 மி.லி தண்ணீரில் கரைத்து 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை குடிக்கும் போது வாழைப்பழம் உண்பதை தவிர்க்கவும்.
11.சுக்கு கஷாயமும் மூலத்தை கண்டிக்கும்.
சித்தா&ஆயுர்வேத மருந்துகள்...
1.இரசகந்திமெழுகு கேப்சூல்,கருணை லேஹியம்,தேத்தான்கொட்டை லேஹியம்,திரிபால சூரணம்.
2.அபயாரிஷ்டம்,சந்தனாசவா,குமரியாசவா,குடஜஅரிஷ்டம்,சுகுமாரக்ருதம்,புஷ்யாணுக சூரணம், திரிபால சூரணம்,
குறிப்புகள்..
• நிறைய தண்ணீரை(வெந்நீர்)குடிக்கவும். ஒரு நாளைக்கு 10 டம்ளராவது தண்ணீர் குடிக்க வேண்டும்
• நார்ச்சத்து நிறைந்த உணவுகள்(கீரைகள்)முக்கியம்.
• ஆசனவாயின் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கவும்.
• உடற்பயிற்சி, ஆசனங்கள் பலனளிக்கும்.
• தினமும் எனிமா குவளை பயன்படுத்தலாம்.
நன்றி சி.பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக