செவ்வாய், 9 ஜூலை, 2013

காலிஃப்ளவர்;

காலிஃப்ளவர்;
***********
• காலிஃப்ளவர் பூ வகையைச் சேர்ந்தது.
• இது சாதாரணமாக வெள்ளையாகவோ இளம் மஞ்சளாகவோ காணப்படும். இவற்றில் வயலட் கலர் காலிஃப்ளவரும் உண்டு.
• காலிஃப்ளவர் பூவைவிட பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக கால்சியம் சத்து உள்ளது.
• காலிஃப்ளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக்கொண்டால் வாயுத் தொந்தரவும் ஏற்படாமல் தடுக்கலாம்.
• இதில் வைட்டமின் பி1, 2, 3, 4, 5, 6 மற்றும் பி9 வைட்டமின்கள் காணப்படுகின்றன.
• காலிஃப்ளவரை வாரம் இருமுறை உட்கொண்டால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்.
• இதில் சல்போராபேன் மற்றும் இண்டோல்-3- கான்ஃபினோல் போன்ற கலவைகள் இருப்பதால் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டது.
• காலிஃப்ளவரை அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக்கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிவிடும். இரும்பு இதை பழுப்பு நிறமாக்கிவிடும்.
• இதை தண்ணீரில் வேக வைப்பதைவிட நீராவியிலோ, மைக்ரோ வேவ் அவனிலோ வேக வைக்கலாம்.
• காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக